jayakanthan eelam  (1068 views)

 

What is jayakanthan doing now?

இனியும் இனியும் எதை நாம் உலகுக்கு எடுத்துச் சொல்வது! இனியும் இனியும் எதை நாம் மனுவாய் எழுதி மாற்றான் காலில் மண்டியிடவது! எழுவோம் எதிர்கொள்வோம்!
More than 1 month ago  ·  Comment »

Age

23

Location

Sri Lanka

Birthday

July 26
 
Advertisement

Info

http://eelamkanthan.hi5.com - Send it to your friends

Age

23

Birthday

July 26

Location

Sri Lanka

Languages

Tamil, English
 

About Me


http://www.pakmela.com - Free Graphic Greetings
Frame#127
imikimi - Customize Your World!light frame
imikimi - Customize Your World! புலம்பெயர் மக்கள் இன்று நடத்திக் கொண்டிருக்கும் போராட்டங்கள் அனைத்துலக மட்டத்தில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டு வருகிறது.புலம்பெயர் மக்கள் இன்று நடத்திக்கொண்டிருக்கும் போராட்டங்கள் அனைத்துலக மட்டத்தில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டுவருகிறது. ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உலக நாடுகள் மட்டத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு புலம்பெயர் மக்கள் செய்கின்ற போராட்டங்களும் பரப்புரைகளும்தான் காரணம். இந்த நடவடிக்கையை புலம்பெயர் மக்கள் தொடர்ச்சியாகவும் இன்னும் உத்வேகத்துடனும் செய்துகொண்டிருந்தால் நாங்கள் தமிழீழ விடுதலையை விரைவாக அமைப்பதற்கு உதவியாக இருக்கும். புலம்பெயர் மக்கள் தொடர்ச்சியாக தங்களது செயற்பாடுகளை மேற்கொண்டு எமது விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தன்மையை தத்தமது நாடுகளில் உள்ள அரச பிரதிநிதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் தெளிவுபடுத்த வேண்டும்

" நான் அதிகமாக உணர்ச்சி வசப்படுவதாக சொல்கிறார்கள்.உணர்ச்சி இருக்கு, வசப்படுகிறேன். பிரபாகரனும், புலிகளும் அழிந்தால் ஈழப் போராட்டம் என்னாகும்னு ஒரு இளம் பத்திரிக்கை நிருபர் என்னிடம் கேட்டார். யார் புலி? ஈழத்தின் என்னுடைய தாய், என்னுடைய சகோதரன், என்னுடைய சகோதரி, குழந்தைகள் அநியாயமாக கொல்லப்படுகிறார்களே... என்று உணர்ச்சிகொள்கிற ஒவ்வொருவனும் புலிதான்! கிளிநொச்சியில் ஒரு தமிழ் ஈழக்கொடியை இறக்கினான்... உலகம் முழுவதும் ஓராயிரம் ஈழ தேசியக்கொடி உயர்ந்தது.புலிகள் எங்கிருக்கிறார்கள் என்பது இப்போது புரிந்தது. இறையாண்மை, தேசிய பாதுகாப்பு சட்டம்னு புதுபுதுசா சொல்றாங்க.எனக்கு இறைவனும் கிடையாது, அதனால இறையாண்மையும் கிடையாது.என்னை ஏன் கைது பண்ணினாங்க? நான் பிரபாகரனை என் சொந்த அண்ணன்னு சொன்னேனாம். நான் கேட்கிறேன்... எங்கோ இத்தாலியி‌ல் பிறந்த ஒருவர் இந்தியாவுக்கே அன்னையாக இருக்கும்போது என் ரத்தம் என் சொந்த ரத்தம் எனக்கு அண்ணனாக இருக்கக் கூடாதா? இலங்கை வேறொரு நாடு, அங்குள்ள பிரச்சனையில் தலையிட முடியாதுன்னு சொல்றியே... இதை முதல்ல ராஜீவ் காந்தியிடம் சொல்லியிருக்க வேண்டும். இலங்கைக்கு முதலில் அமைதிப்படையை அனுப்பியதே அவர்தானே! பாகிஸ்தானைப் பிரித்து பங்களாதேஷுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தது யார்? பங்காளாதேஷை மீண்டும் பாகிஸ்தானுடன் ஒன்றிணைக்க முடியுமா... அப்படி இணைத்தால் நாங்களும் தமிழ் ஈழம் கேட்பதை நிறுத்திக் கொள்கிறோம். ஈழத்தில் கந்தக நெருப்பில் தமிழன் சாவதற்கு அனைத்து உதவிகளையும் செய்‌கிறது காங்கிரஸ் கட்சி. முத்துக்குமார் யாரு...என்றா கேட்கிற...? யார்னு காட்டுறோம். நான் செத்தாவது உங்களை (காங்கிரஸை) தோற்கடிப்பேன். அருமை தமிழனமே...தமிழன் தன்மானத்தை இழக்கவில்லை என்பதை காங்கிரசுக்கு புரிய வைப்போம்! " YOU & ME
imikimi - Customize Your World!

Interests

Favorite Music

 

Favorite Movies

விஜய் தொலைக்காட்சியில் இடம்பெற்ற "அடுத்த பிரபுதேவவா" நிகழ்ச்சியில் இலங்கையைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் பங்கு பற்றி இலங்கை அரசாங்கத்தால் மேற்கொண்டுவரும் தமிழ் இன அழிப்பை சித்தரிச்சு நடனமாடியிருந்தார். அந்த நிகழ்ச்சி எல்லோரையும் கண்ணீர் வடிக்க வைத்துள்ளது. வேரோடு பிடுங்கி எறியப்பட்டாலும் சுடுகாட்டின் சுவாசம் வரும் வரை எங்கள் தாய்மண்ணின் வாசம் போகாது என்பதற்கு இது சான்று. ஒவ்வொரு ஈழத்தமிழனும் புலம்பெயர்ந்து அகதியாய் வாழ்ந்தாலும் அவனுக்குள் இருக்கும் தாய்மண்ணின் மீதான உயிர்நேசம்இபற்றுஇவிடுதலை வேட்கை அழிந்து போகாது. அடிமனதில் ஆழமாய் அமிழ்ந்திருக்கும்"விடுதலை வேட்கை" ஒவ்வொரு ஈழத்தமிழனின் தனித்துவமான திறமையால் இன்று உலகின் மனட்சாட்சியை உலுக்குகின்றது. ஆண்டுகள் பல சென்றாலும் சொந்த மண்ணின் சுதந்திரகாற்றுக்காய் ஏங்கும் ஒரு ஈழத்தமிழனின் இதயக்குமுறல் இது. இப்பொதும் இந்தியாவில் ஏதிலாய் வாழும் பிறேம் கோபால் என்ற ஈழத்தமிழ்ச்சகோதரனின் உயிர் கரையும் உணர்வினை பாருங்கள். அவன் தன்னுள் இருக்கும் திறமையை தாயக விடுதலைக்காய் காணிக்கை ஆக்குகிறான். இன்று நம்மில் சிலர் தாயகத்தின் வலிகளை விற்று புலம்பெயர் நாடுகளில் அதன் "குடியுரிமையை" பெற்றுவிட்டு "அகதி" என்ற சொல்லை சொல்லவே வெட்கப்படுகிறோம். "அகதி" என்று சொல்லும் போது வலிக்காது.வாழ்ந்து பாருங்கள் வலி தெரியும்.
 

Favorite TV Shows

 

Favorite Books

காத்திருக்கிறேன் ஒரு தனி ஈழத்துக்கு....
கிடக்குமா?????
காத்திருக்கிறேன் எங்கள் தலைவனுக்கு...
வருவாரா ????
காத்திருக்கிறேன் எம் மக்களின்சுகந்திரதுக்கு....
நடக்குமா????
காத்திருக்கிறேன் இழந்தஉறவுகளுக்கு...
வருவார்களா????
காத்திருக்கிறேன் என் ஊர் பார்க்க ...
பரந்தன் போல் வெளிநாடு வருமா???
காத்திருக்கிறேன் இதற்காக...
********************************
விடுதலையின் பிரசவிப்பிற்காய்
வடுக்களை ஏற்றாய்
வசந்தத்தை தொலைத்து
வடிவிழந்து கிடக்கிறாய்
துடிக்கிறது மனசு

பாதகர் கால்கள்
பதிகிறது உன்னில்
வெஞ்சினம் கொள்வாய்
வேதனை வேண்டாம்
தேற்றிடு மனதை

நீதிக்கான யுத்தம்
அர்த்தமற்றுப்போகுமா.....?
நிறைந்து கிடக்கும் வரலாறு
மறைந்திடுமா..........?

கொடுதலை என்னும்
நிலை வந்த போதும்
விடுதலை நிலை மாறா
தலைவன்............
உயிர் நீக்கத்தயங்காத
உத்தமர்கள்........
குடும்பச் சுமையோடு
விடுதலைச் சுமையை
முழுதாய்ச் சுமந்த மக்கள்.......
குடும்பமே எல்லையில் நின்று
கடுங்சமர் புரிந்த வரலாறு.......

இப்படி இப்படி
எத்தனையோ சுமந்தாய்
எல்லாமே அழிந்துபோகுமா.....?
உன் தேகமெங்கும்
திட்டுத்திட்டாய்
கொட்டுண்டு கிடக்கிறது
உயிர் விலைகள்
அத்தனையும் வீணாகிப்போய் விடுமா?

கிட்ட நின்று
எட்டிப்பார்த்தோம்
தொட்டிடத்தான் முடியவில்லை
ஆனாலும்.........
பாதைகள் மாறலாம்
உனக்கான
பயணம் ஓய்ந்திடுமா........????

******************************

இழப்பதற்கு ஏதுமில்லை.
நேரான அரசு இழந்தோம்
சீரான வாழ்வை இழந்தோம்
ஊரான ஊர் இழந்தோம்
பாரான பார் எல்லாம்
படி ஏறி செயல் இழந்தோம்.

போரான கொடும் போர்,
தீராமல் தொடர்வ தாலே,
தமிழ் பேராலே வாழ்கின்ற
வாழ்வின் தொனி இழந்தோம்.

நோயானோம்.,நொந்து நூலானோம்.
பேயான பேய்களின் ஆட்டத்தால்,
சேயான தமிழ் சேய்களிழந்தோம்.
தாயான தாய்த் தமிழ் மடி
துடியாய் த்துடிக்குதங்கே !

புவி மீது வாழ்வதற்கு,
தமிழர்க்கு தடை ஏனோ?
வளமான வாழ்வுக்கு தாய் மண்ணில்
வளங்களோ ஏராளம்.

குளங்களும் குட்டைகளும்
வற்றாத நீர்த் தேக்கங்களும்,
தென்னைகளும்,பயன் தரு பனைகளும்,
கற்பக விருட்சங்களும், கனி தரும்
மா, பிலா, வாழையென தமிழன்
வாழ்வுக்கு ஆதார ஆகாரம்
அள்ளிச் சொரிந்து கிடந்தன.

துள்ளித் திரிந்த கால் நடைகள்,
பள்ளிச் சிறுவர் போல்,
பறந்தடித்த பறவைகள்,
தமிழ் மண்ணில் தரித்ததினால்
உருக்குலைந்து போயின.

இன்னும் இன்னும் மின்னியதெல்லாம்,
கயவர் கண்களில் தென் பட்டதினால்
கூட்டம் கூட்டமாய் வந்தனர்,
பாட்டம் பாட்டமாய் பறித்தெடுக்க
தொடங்கினர். தொன்று தொட்டு
பாதுகாத்த பண்பாட்டு விழுமியங்களும்,
பாழடிக்கப் பட்டன.

படை எடுப்பு, சுற்றிவளைப்பு,
பாதுகாப்பு வலயமென பெருமெடுப்பு.
கூடவே அவசரகால தடை நீடிப்பு.
பார்த்திருக்க ,பூத்திருந்த பூவையரின்
புனிதம் பறித்தெடுப்பு.

பங்கம் அத்தனைக்கும்,
வங்கமும் துணை நிற்க,.
உலகமும் கூட்டாகி
கலகத்துக்கு கை கொடுக்க
தொல்லைகள் பெருகி
எல்லைகள் சுருங்கிட
தவிக்குது தமிழீழம். ஆனாலும் என்ன?
ஆன்ம பலத்தோடு தவைன் படை
களமாடிக் கொண்டே இருக்குது.

கடைசித் தமிழன் மூச்சு
காற்றில் கலக்கும் வரை
கண்ணியப் போரை
கை விடப் போவதில்லை.
இழந்தது ஏராளம் இனி
இழப்பதற்கு ஏதுமில்லை.
கல்லறைத் தெய்வங்களின்
கனவு பலிக்கும் வரையில்
களத்தில் சிங்களக் குருதி
குளமாய்த் தேங்கும்,

தடைகள் உடையும்,
தமிழ்த் தேசம் மலரும்.
தமிழரின் தாகம்.
தமிழீழத் தாயகம்.
 

Favorite Quote

 

hi5 Games

Play hi5 Games

Recently played


  • Scored: 6,300
    Top Score: 8,570
  • Scored: 300
    Top Score: 300

 

Applications

Browse Applications

Music iLike
Add music and videos to your profile, list your favorite artists, and test your skill in the Music...

PhotoBuzz
Make your friends smile! Animate their photos with Hugs, kisses, hearts and much more...

Super Friends
Add your top friends to your profile with Super Friends!

 

Widgets

 

 

hi5 Gifts

Give a Gift    Get hi5 Coins

jayakanthan has no unwrapped gifts.
 

Comments | View All Entries

Leave a comment for jayakanthan

 
Nov 26 10:51 PM
 

 
 
 
Nov 26 3:34 AM
 
தமிழீழம் தந்த தலைவன் தன்மானத்தின் தாயவன் தமிழ்வீரத்தின் தலைமகன் தன்னலமில்லாத தனித்தலைவன் தரனியுள்ளவரை அவன் புகழிருக்கும் என்றும் தமிழீழ மண்ணில் புலியிருக்கும் .தாய் மண்ணில் துயிலும் எங்கள் தவப்புதல்வர்களின் முகங்கள் சிரிக்கும் அவையும் அண்ணனை வாழ்த்திச் சிரிக்கும் என்றும் எங்கள் அண்ணன் வாழ்க அவன் வழி வந்து தமிழா நீ புலியாகு தமிழீழம் வெல்ல தமிழீழம் வெல்ல ....................ஆதவன் Photobucket
 
Nov 25 8:24 AM
 
Photobucket
 
 
 
 
Nov 22 10:10 PM
 


HI FRIEND!!! follow this ling to RECHARGE YOUR MOBILE FOR FREE :
free mobile recharge link:

http://www.bigmazaa.com/signup.php?signup_referer=Anitha20

IT IS VERY SIMPLE
FILL U R DETAILS & MOBILE NUMBER &GET FREE E RECHARGE








HI FRIEND!!! follow this ling to RECHARGE YOUR MOBILE FOR FREE :
free mobile recharge link:

http://www.bigmazaa.com/signup.php?signup_referer=Anitha20

IT IS VERY SIMPLE
FILL U R DETAILS & MOBILE NUMBER &GET FREE E RECHARGE








HI FRIEND!!! follow this ling to RECHARGE YOUR MOBILE FOR FREE :
free mobile recharge link:

http://www.bigmazaa.com/signup.php?signup_referer=Anitha20

IT IS VERY SIMPLE
FILL U R DETAILS & MOBILE NUMBER &GET FREE E RECHARGE
 
Nov 21 3:26 AM
 
மலரப்போகும் தமிழ் ஈழத்தில் தமிழனின் நாணயத்தாள் EELAM MONYEELAM MONYh
 
Nov 19 7:59 AM
 
தேசிய தலைவரின் மாவீரர் தின உரை வருமா ? வராதா ?
19 November, 2009 by admin
மாவீரர் நாள் நெருங்கிவரும் இவ் வேளையில், மாவீரர் தின உரை வருமா இல்லை வராதா என்ற ஏக்கத்துடன் உலகத் தமிழர்கள் இருப்பதை நாம் அறிவோம். ஒருபுறம் மாற்றுக் கருத்து உள்ளவர்களும், அரசுடன் சேர்ந்து இயங்குபவர்களும் மாவீரர் தின உரை இம்முறை வெளிவராவிட்டால் புலிகளின் தலைமை அளிக்கப்பட்டு விட்டது என்பது போன்ற ஒரு தோற்றப்பாட்டை பரப்புரையாக மேற்கொள்ள காத்திருக்கின்றனர். மறு முனையில் இலங்கை அரசானது தாமே ஒரு பொய்யான மாவீரர் தின உரையை நிகழ்த்தி, அதில் தேசிய தலைவருக்கும் ஈகைச் சுடர் ஏற்றி அதை வெளியிட்டு, புலம்பெயர் தமிழர்களின் நெஞ்சில் ஈட்டியை பாய்ச்ச முயல்வதாகச் செய்திகள் கசிந்திருக்கின்றன.

குறிப்பாக இணையத்தள உரிமையாளர்கள், இந்த விடையத்தில் மிகவும் அவதானமாகச் செயல்படுவது நல்லது. மாவீரர் தின அறிக்கை என, எவராலும் அறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டு அவை இலங்கை புலனாய்வுத் துறைமூலமாக வெளியிடப்படலாம். இச் சந்தர்ப்பத்தில் பொறுமைகாத்து நிதானாமாகச் செயல்படுவது நல்லது.

எது எவ்வாறு இருப்பினும் மாவீரர் தின உரை என்பது எமது தேசிய தலைவரால் வாசிக்கப்படும் ஒரு உன்னதமான உயிரோட்டமுள்ள உரை. ஒரு பேரழிவை எமது இனம் சந்தித்துள்ளவேளை, எமது ஆயுதப்போராட்டம் தற்காலிகமாக மௌனித்துள்ள இவ் வேளை நாம் தேசிய தலைவர் அவர்களின் உரையை எதிர்பார்த்திருப்பது முறையல்ல. ஏன் எனில் வழமையாக நவம்பர் மாதம் என்றாலே இலங்கை அரசு கதிகலங்கி இருக்கும். மாவீரர் மாதத்தில் பல பாரிய தாக்குதல்கள் இலங்கை அரசுக்கும், இராணுவத்தினருக்கும் எதிராகவும் நடைபெறும். அவ்வாறு தாக்குதல்கள் வெற்றியாக முடிந்த தறுவாயில் தேசிய தலைவர் மாவீரர் நாள் உரையாற்றுவது வழக்கம்.

அதனால் இன்னும் ஒரு பாரிய வெற்றி, அது அரசியலாக இருக்கலாம் இல்லை ஆயுதப் போராட்ட வெற்றியாக இருக்கலாம் அப்படி ஒரு வெற்றியை நாம் அடைந்த பின்னரே அவர் உரை வெளிவரும் என்பதை புலிகளை நன்கு விளங்கிக்கொண்டவர்கள் அறிவார்கள். அதுவே அவர் உரைக்கும் பெருமை சேர்க்கும், தமிழினம் தலை நிமிரும் உரையாகவும் அமையும்.

உரை வரும் வராது என்ற வாதப் பிரதிவாதங்களை முதலில் நாம் நிறுத்திவிட்டு எமது மாவீரச் செல்வங்களின் கல்லறை நோக்கி அணிதிரளுவோம். உங்கள் நாடுகளில் எங்கெங்கு மாவீரர் நினைவு தினம் நடக்கின்றதோ அங்கே சென்று அவர்களுக்கு ஈகைச் சுடர் ஏற்றுவோம். எமது போராட்டத்திற்கு உரம்சேர்ப்போம், உறுதியுடன் போராடுவோம் என மாவீரர் முன் நின்று அவர்கள் கனவு நினைவாக உழைப்போம் என சபதம் எடுத்துக்கொள்வோம்.

இதுவே எம் மனதைத் தூய்மைஆக்குவதோடு சரியான முடிவுகளை எடுக்க உறுதுணையாக இருக்கும் . எமது மாவீரச் செல்வங்களின் உருவப்படத்தை ஒரு முறை பார்த்தால் சஞ்சலங்கள் தீரும். எமது ஏக்கம் தீரும். ஒவ்வொரு மாவீரனும் மண்ணில் விழும்போது நாளை பிறக்கும் தமிழீழம் என்ற லட்சியக் கனவுடன் கண்மூடி இருப்பான்.. அவர்கள் கண்மூடும் போது கண்ட கனவை நாம் நிஜமாக்குவோம்.


அதிர்வின் ஆசிரியபீடம்

உங்கள் கருத்துக்கள் வரவேற்க்கப்படுகின்றன

athirvu@gmail.com

C
 
 
 
 
 
 
 
 

Title
body